தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உதயநிதி சட்டையில் உதயசூரியன் - தகுதி நீக்க அதிமுக கோரிக்கை! - admk

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வற்புறுத்தியுள்ளது.

Udhayanithi Stalin
Udhayanithi Stalin

By

Published : Apr 6, 2021, 3:51 PM IST

Updated : Apr 6, 2021, 4:04 PM IST

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்துள்ள புகார் மனுவில், “மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்த, திமுக இளைஞரணிச் செயலாளரும், அக்கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது கட்சி சின்னமான உதயசூரியன் உருவம் பொறித்த கருப்பு சிவப்பு கொடியுடன் கூடிய சட்டையை அணிந்து சென்றுள்ளார். இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.

தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு இருக்கக்கூடிய 48 மணி நேர பரப்புரை தடையை மீறிய இச்செயல், வாக்களிக்க வரும் பொதுமக்களை திசை திருப்பும் விதமாகவும், மனநிலையை மாற்றுகின்ற விதமாகவும், தெரிந்தே செய்ததாகும். மேலும், இந்த விதிமீறலானது, தேர்தல் நடத்தை விதிமுறையின்படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றமாகும்.

எனவே, அப்பட்டமான விதிமீறலில் ஈடுபட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குத் தொடுப்பதோடு, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி மே 3ஆம் தேதி சிறையில் இருப்பார் - கார்த்திகேய சிவசேனாபதி

Last Updated : Apr 6, 2021, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details