தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயிரிழந்த அதிமுகவினர் குடும்பத்திற்கு நிதியுதவி! - ops eps

சென்னை: ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் குடும்ப நல நிதி வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

office
office

By

Published : Jan 28, 2021, 4:41 PM IST

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூக்கன் என்பவர் மாரடைப்பால் காலமானார்.

அதேபோல், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் போது விபத்துக்குள்ளாகி காலமானார். இருவரது மரணச் செய்தியும் ஆற்றொணாத் துயரத்தை அளித்துள்ள வேளையில், அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மூக்கன், மாரியப்பன் இருவரது குடும்பத்தினருக்கும் நலநிதியாக தலா 3,00,000 ரூபாய் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா! - முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details