தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றால்தான் கூட்டணி’ - முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி

சென்னை: முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Dec 28, 2020, 6:24 PM IST

சைதாப்பேட்டையில் இன்று அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணிகள் உறுதி செய்யப்படும். நேற்று நடந்த அதிமுக பொதுக்கூட்டம் எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க தொடங்கிவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் இருந்த கட்சிகள், தற்போதும் எங்களுடனே இருக்கின்றனர். அதிமுகவை யாரும் நிர்பந்திக்க முடியாது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக வலிமையான இயக்கம். எனவே எந்த ஒரு தேசியக் கட்சியும் எங்களை அழிக்க முடியாது. அப்படி நினைத்தால் அவர்கள் தான் அழிந்து போவார்கள்.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம் “ என்றார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் முருகன் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details