தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை - chennai news

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை இன்று (ஆகஸ்ட் 23) முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

அரசு கலை கல்லூரி மாணவர்கள் சேர்க்கை
அரசு கலை கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

By

Published : Aug 22, 2021, 11:07 PM IST

Updated : Aug 23, 2021, 6:38 AM IST

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை இன்றுதொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-22 ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் விண்ணப்பங்களைப் பெற்றனர்.

மொத்தம் இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு சுமார் 3 லட்சத்து மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன், அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், "இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. அதனை அரசுக் கல்லூரியின் முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு

மேலும், மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை அரசுத் தேர்வுத்துறையின் மூலம் சரி பார்க்க வேண்டும். அதன் உண்மைத்தன்மை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் தவறு கண்டறியப்பட்டால் அவரின் சேர்க்கையை நிறுத்த வேண்டும்.

மாணவர்களின் தரவரிசைப் பட்டியலைச் சரிபார்த்து கல்லூரியின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். மாணவர்களை கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இணையம் அல்லது நேரில் வர வைத்து சேர்க்கை நடத்தலாம். மாணவர்கள் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அவசியம்

மாணவர்களைக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் சேர்க்கை நடத்தலாம். இது குறித்த விபரங்களை மாணவர்களுக்கு குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இணையவழி விண்ணப்பித்த மாணவர்களிடம் அச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சேர்க்கையின் போது அளித்து பூர்த்தி செய்து பெற வேண்டும்.

மாணவர் ஒரு பாடப்பிரிவிற்கு விண்ணப்பம் செய்திருந்து, அந்த இடங்கள் நிரம்பி விட்டால் வேறு பாடப்பிரிவில் விதிகளைப் பின்பற்றிச் சேர்க்கலாம். மாணவர்களுக்கு கணினி பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர்வதற்கு ஊக்குவித்து, கல்லூரியில் நடத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Last Updated : Aug 23, 2021, 6:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details