சென்னை:வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ''பல்கலைக்கழக மானியக்குழு தொலைதூரக்கல்வி முறையில் மருத்துவம், பொறியியல், விவசாயம், சட்டம், நர்சிங், பல் மருத்துவம், பிசியோதெரபி போன்ற படிப்புகளைத் தடை செய்து 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவின் திறந்தநிலை, தொலைதொடர்பு விதிகளிலும் மேற்குறிப்பிட்ட படிப்புகளைத் தடை செய்தது மட்டுமின்றி நேரடி முறையில்தான் பயில வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழக மானியக் குழுவால் தடை செய்யப்பட்ட படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்த தடை விதிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.