சென்னை:கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு விதித்திருந்த நிலையில், மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் தவே, இந்த வழக்கில்
ஏற்கனவே ஆரம்பகட்ட விசாரணைக்கு காவல்துறை அதிகாரி பொன்னியை சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தது. அதன் ஆரம்பகட்ட விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லை என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.