தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

100 மில்லியனைக் கடந்து அடிச்சி தூக்கிய தல அஜித் பாடல்..! - 100M Views

'தல' அஜித்தின் விஸ்வாசம் படத்தில் உள்ள 'அடிச்சி தூக்கு.. அடிச்சி தூக்கு' பாடல் யூ-ட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

100 மில்லியனைக் கடந்த தல அஜித் பாடல்
100 மில்லியனைக் கடந்த தல அஜித் பாடல்

By

Published : Aug 13, 2021, 8:06 PM IST

நடிகர் அஜித் படங்கள் என்றாலே தனி மாஸ் தான். அண்மையில் வெளியான அஜித் படங்கள் அனைத்தும், ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

2019ஆம் ஆண்டு நடிகர் அஜித் குமார், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. இப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்ற படமாகும்.

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அடிச்சி தூக்கு.. அடிச்சி தூக்கு

100M பார்வைகள்

இப்படம் உலகெங்கிலும் 200 கோடி ரூபாய் வசூல்செய்த படமாகும். இப்படம் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றவர், இசையமைப்பாளர் இமான்.

'விஸ்வாசம்' படத்தில் டி. இமான் இசையமைப்பில் வெளியான 'அடிச்சி தூக்கு.. அடிச்சி தூக்கு' பாடல் தற்போது யூ-ட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்பாடல் 100 மில்லியனைக் கடந்ததால் ரசிகர்கள் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'PM தோனி - CM விஜய்' - மதுரையை கலக்கும் சுவரொட்டிகள்

ABOUT THE AUTHOR

...view details