2021ஆண்டு ஜனவரி மாதம் கடலூர் மாவட்டம், கலர்குப்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பிரியா, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நிலையில், வயிற்றில் பஞ்சை வைத்து தையல் இட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இழப்பீடு தர உத்தரவு
ஆணைய உறுப்பினரான துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவ சேவை குறைபாடு காரணமாக மரணமடைந்த பிரியா ஒரு தினக்கூலி என்பதால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, நாளொன்றுக்கு 250 ரூபாய் வருமானமாக நிர்ணயித்தும், அவரது மரணம் மற்றும் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாகவும் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்தத் தொகையை கணவருக்கு வழங்க வேண்டுமெனவும், அந்தத் தொகையில் பாதியை குழந்தை பிரியாஸ்ரீ பெயரில் வைப்புத்தொகையாக செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் உத்தரவு தேவை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக பிரசவ வார்டுகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்யும்படியும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வாக்கு சேகரிக்க கூட்டமாக செல்லக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்