தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பு - தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை

தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மை செயலாளராக பணியாற்றி வரும் ராஜேஷ் லக்கானிக்கு, கூடுதல் பொறுப்பாக அறிவியல் நகரத் துணைத் தலைவர் பதவியையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பு
அறிவியல் நகர துணைத் தலைவராக ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பு

By

Published : Jan 7, 2021, 6:18 AM IST

சென்னை: அறிவியல் நகர துணைத் தலைவராக, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மை செயலாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம், ஓய்வு பெற மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு அக்., 2ஆம் தேதி, விருப்ப ஓய்வு கேட்டு தமிழ்நாடு அரசிற்கு கடிதம் அளித்திருந்தாா்.

அவரின் விருப்ப ஓய்வுக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு, புதன்கிழமை (ஜன.6) அவரை பணியிலிருந்து விடுவிப்பதாக அறிவித்து.

இந்நிலையில், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மை செயலாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பாக அறிவியல் நகர துணைத் தலைவர் பதவியை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் சகாயம்!

ABOUT THE AUTHOR

...view details