தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம் - சத்யபிரதா சாஹூ

சென்னை: வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் பிரத்யேகமாக ஒதுக்கப்படும் எனத் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம்  -  சத்யபிரதா சாஹூ
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம் - சத்யபிரதா சாஹூ

By

Published : Jan 27, 2021, 6:58 PM IST

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேர்தல் முடியும் நேரத்தில் ஒரு மணி நேரம் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மேலும், “மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நான்கு நாள்கள் நடைபெற உள்ளது. சென்னையில் 16 மாவட்டங்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகளை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்துவதற்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்டவர்களை கொண்டு வாக்கு செலுத்துவதற்கான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details