சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் கரங்கள் குழுவுடன் உறுதுணையாக பணியாற்றும் தன்னார்வலர்கள் 150 பேருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன. தேசிய விருது பெரும் நோக்கத்துடன் காவல் கரங்கள் செயல்பட வேண்டும்.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆதரவற்றோர்களின் உடல்களை அடக்கம் செய்ய கூடுதல் மயானங்கள் அமைக்க நடவடிக்கை - Constabulary Committee
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆதரவற்றோர்களின் உடல்களை அடக்கம் செய்ய கூடுதல் மயானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்
அதேபோல, தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனம் காவல் கரங்கள் குழுவுடன் இணைந்து தற்போது இரண்டாம் கட்ட கருணை பயணத்தை தொடங்கி உள்ளது. ஆதரவற்றோர்களை அவர்கள் குடும்பத்தாரிடம் சேர்க்கும் மூன்றாவது கருணை பயணமும் கூடிய விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் ஆதரவற்றோர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஏற்கனவே ஒரு மயானம் இருக்கும் நிலையில், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கூடுதல் மயானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.
இதையும் படிங்க: விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு துணைவேந்தர்கள் ஊக்கமளிக்க வேண்டும்... ஆளுநர் ஆர்.என்.ரவி