சென்னை: கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திருத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் அமைச்சர்களின் பதிலுரை-அறிவிப்புகளும் நடைபெற்றுவருகின்றன.
இன்று நடைபெற்றுவரும் கூட்டத் தொடரின்போது, 'திருப்பரங்குன்றத்தில் புதிய கலை அறிவியல் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா' எனத் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி நேரத்தின்போது கேட்டார்.
மேலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 25 விழுக்காடு கூடுதல் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்தார்.