தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூடுதலாக இன்று 1450 அரசுப்பேருந்துகள் இயக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்ததையொட்டி, மீண்டும் பள்ளிகள் திறப்படுவதனால், கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து

By

Published : Jun 12, 2022, 3:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, நாளை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கபடவுள்ள நிலையில் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்லக்கூடுதலாக 1,450 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பள்ளி அமைவிடம், போக்குவரத்து வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டு, பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கூடுதலாக 1,450 அரசுப்பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகள் நாளை திறக்கப்படுவதை ஒட்டி, பள்ளி மாணவ-மாணவியர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details