தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அன்புள்ள ரஜினிகாந்த், என் ராசாவின் மனசிலே, வீரா, எஜமான், அவ்வை சண்முகி, நாட்டாமை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.