தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த நடிகை கவுதமி! - உள்ளாட்சித் தேர்தலில் பாஜக

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சி அலுவலகத்தில் நடிகை கவுதமி இன்று விருப்ப மனு வழங்கினார்.

bjp

By

Published : Nov 16, 2019, 4:13 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் போட்டியிட விரும்பும் பாஜக நிர்வாகிகள் சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, நடிகை கவுதமி இன்று விருப்ப மனு வழங்கி வாழ்த்துக் கூறினார்.

அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வருவதாகவும் ஆனால் தேர்தல் நடக்க வேண்டியது கட்டாயம் என்றும் அவர் கூறினார். தான் யார் என்பதை சந்தேகப்படும் அளவுக்கு நடந்துகொண்டதில்லை எனவும் 23 ஆண்டுகளாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருவதாகவும் கூறினார்.

bjp

தொடர்ந்து பேசிய அவர், விருப்ப மனுக்கள் பெற்றுள்ள அனைவரும் மக்கள் மீதும் தேசத்தின் மீதும் அக்கறை கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்து கூறினார்.

இதையும் படிங்க: தேமுதிக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த விஜயகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details