தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹேம்நாத் கொடுமை செய்தார் - சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை நீதிமன்றத்தில் பதில் மனு! - சித்ராவின் தந்தை பதில்மனு

ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த கொடுமையின் காரணமாகவே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

chitra
chitra

By

Published : Jul 4, 2022, 9:03 PM IST

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்த சித்ராவின் தந்தை காமராஜும் ஹேம்நாத் மனுவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி காமராஜ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "உயிரிழந்த சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என ஹேம்நாத் சித்ரவதை செய்ததாகவும், தனது மகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை வீட்டிற்கு ஹேம்நாத் அழைத்து வந்துள்ளதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோருவதாகவும், போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை எதிர்கொள்வதே சரியானது எனவும், எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யாமல், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு... குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் மனு!

ABOUT THE AUTHOR

...view details