சென்னை: நகைச்சுவையில் சமூக கருத்துக்கள் சொல்லி தமிழ் மக்களை ரசிக்க வைத்த மகா கலைஞன் விவேக் கடந்தாண்டு காலமானார். இன்று (ஏப்ரல்.17) அவருக்கும் முதலாமாண்டு நினைவு தினம். இந்த நாளை அவரது ரசிகர்கள் மரக்கன்றுகள் நட்டு அனுசரித்துவருகின்றனர்.
அந்த வகையில், அவரது கனவுத் திட்டமான ஒரு கோடி மரங்கள் நடும் பசுமை கலாம் திட்டத்தை தொடரும் வகையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை விவேக்கின் நண்பரும், நடிகருமான செல் முருகன் தொடங்கிவைத்தார்.