தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Latest Dmdk News:'பிரதமருக்கு கடிதம் எழுதியது குற்றமா?' - விஜயகாந்த் - விஜயகாந்த்

சென்னை: தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்பப்பெறுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

By

Published : Oct 6, 2019, 7:20 PM IST

Updated : Oct 6, 2019, 7:26 PM IST

Latest Dmdk News: கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் வன்முறைத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அப்போது பரவலாக பேசப்பட்ட இக்கடிதம் சிறப்பாக செயல்படும் நரேந்திர மோடியின் பணிகளைக் குறைத்து மதிப்பிடுவதாக, பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி,அந்த மாநில நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இதை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, பிரதமருக்குக் கடிதம் எழுதியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுதிர் குமார் ஓஜா தெரிவித்தார். தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ட்விட்டர் பதிவு

அந்த பதிவில் 'தேசத் துரோக வழக்குகள்' என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவது தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல என்றும்; தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்பப்பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்க:

மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு!

Last Updated : Oct 6, 2019, 7:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details