தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரசாந்த் கிஷோரை சந்திக்கவில்லை... நடிகர் விஜய் தரப்பு மறுப்பு! - சென்னை செய்திகள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் விஜய், அங்கு தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாகப் பரவிய தகவல்களுக்கு, அவர் தரப்பு அளித்த விளக்கத்தை செய்தியில் காண்போம்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

By

Published : Mar 15, 2022, 8:47 PM IST

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர், நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிப்பு மட்டுமின்றி, அரசியலிலும் ஆர்வம் கொண்டுள்ள விஜய் தனது மக்கள் மன்றத்தின் மூலம் பல நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.

பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பா?

மேலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விஜயின் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளையும் பெற்றுள்ளனர். இதனால், விஜயின் அரசியல் கனவு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற விஜய், தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், தமிழ்நாடு அரசியல் குறித்தும் ஒரு மணிநேரம் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

மறுத்த விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய் யாரையும் சந்திக்கவில்லை என்று விஜய் தரப்பில் இருந்து மறுப்பு செய்தி வந்துள்ளது.

இதையும் படிங்க: 'பீஸ்ட்' படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லையா? சோகத்தில் ரசிகர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details