தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு!

தன் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், உள்ளிட்ட அவரது அமைப்பு நிர்வாகிகள் 11 பேருக்கு எதிராக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜய்
விஜய்

By

Published : Sep 19, 2021, 10:48 AM IST

Updated : Sep 20, 2021, 9:09 AM IST

சென்னை: தனது பெயரை அரசியலில் பயன்படுத்தக்கூடாது என தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு நடிகர் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் பொறுப்பேற்க மாட்டார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நடிகர் விஜய் ஒப்புதலின்றி, 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியும், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கும். தனது கட்சிக்காரருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்

ரசிகர்கள் தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து தனது தந்தை உள்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை 15ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில், தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனின் எந்தவித நடவடிக்கைகளுக்கு தான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் அவரது கட்சியிலும் அமைப்பிலும் தன் பெயரையும், புகைப்படங்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சிவில் வழக்கில் தனது தந்தை மற்றும் அவரது அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 11 பேரை பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார். இந்த மனு செப்டம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Last Updated : Sep 20, 2021, 9:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details