தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகர் சூரி வழக்கு: நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகல்! - Actor Suri land case

சென்னை: நடிகர் சூரி வழக்கில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விலகுவதாகத் தெரிவித்து, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

actor-suri-case
actor-suri-case

By

Published : Nov 5, 2020, 4:56 PM IST

Updated : Nov 5, 2020, 5:05 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த 'வீரதீர சூரன்' என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார். அதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்குப் பதிலாக சிறுசேரியில் நிலம் தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜனும், விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வுபெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலாவும் கூறியுள்ளனர்.

இதனிடையே நடிகர் சூரி, அந்த நிலத்துக்காக அவர்கள் இருவரும் ரூ.2.70 கோடி கூடுதலாகப் பெற்று மோசடி செய்துவிட்டதாக காவல் துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணை நடைபெற்றுவந்தது.

இதற்கிடையில், ரமேஷ் குடவாலா முன்பிணை கேட்டு மனு தாக்கல்செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அக்.28 தேதி வழக்கை இன்றைக்கு (நவ. 05) ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று விசாரணையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தான் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனவும், வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நில மோசடி விவகாரம்: சூரியிடம் போலீசார் விசாரணை

Last Updated : Nov 5, 2020, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details