நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து தன் கைவசம் அரை டஜன் படங்களை சிம்பு வைத்துள்ளார். 'பத்து தல', கௌதம் மேனன் இயக்கத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்', 'மகா' உள்ளிட்ட படங்களிலும் தற்போது அவர் நடித்து வருகிறார்.
முன்னதாக உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்புவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்ததைத் தொடர்ந்து, கடின உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு (Diet) ஆகியவற்றால் உடல் எடையை குறைத்து மீண்டும் புதுப்பொலிவுடன் திரும்பினார் சிம்பு.