தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனா குறித்து நடிகர் சிலம்பரசன் பேசியது கண்டிக்கத்தக்கது' - கருணாஸ் - கருணாஸ் கண்டனம்

சென்னை: கரோனாவை வெல்வோம், கொல்வோம் என நடிகர் சிலம்பரசன் பேசியது கண்டிக்கத்தக்கது என முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.

கருணாஸ்
கருணாஸ்

By

Published : Jan 7, 2021, 3:26 PM IST

இது தொடர்பாக சென்னையில் இன்று (ஜனவரி 7) செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்றார். கள்ளர், மறவர் ஆகியோரை தேவர் இனம் என அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை சார்பாக பாத யாத்திரை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பாத யாத்திரை சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலையில் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கி ராமநாதபுரம் பசும்பொன் கோயில் வரை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கருணாஸ், திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் கரோனா மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கரோனாவை வெல்வோம், கொல்வோம் என நடிகர் சிலம்பரசன் பேசியது கண்டிக்கத்தக்கது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details