பிரபல பாலிவுட் நடிகரும், பிக்பாஸ் வெற்றியாளுருமான சித்தார்த் சுக்லா நேற்று(செப்.2) காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நெட்டின் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.