பேரறிவாளனின் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பேரறிவாளன் விடுதலை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அற்புதம்மாள், குயில்தாசன் மற்றும் பேரறிவாளனின் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கிறேன். விடுதலைக்கு முக்கிய காரணமான தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி.
பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது பல வருடங்களாக பேரறிவாளனின் விடுதலைக்கு போராடிய அனைத்து அரசியல்கட்சி தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் வழக்குரைஞர்களுக்கும் நன்றி. நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Perarivalan Release: பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது - வைகோ