சென்னை: பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66ஆவது திரைப்படம். இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டும் மொழிகளிலும் உருவாகிறது. அண்மையில் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படம் காதல், குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகிறது.
நடிகர் விஜய்க்கு தந்தையாகும் சரத்குமார் - விஜயின் 66வது படம்
நடிகர் விஜயின் 66ஆவது படத்தில், அவருக்கு தந்தையாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![நடிகர் விஜய்க்கு தந்தையாகும் சரத்குமார் Actor sarathkumar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15024868-1068-15024868-1650011088410.jpg)
Actor sarathkumar
இந்த நிலையில் இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இப்படத்தில் விஜய்க்கு இரண்டு அண்ணன்கள் இருப்பதாகவும், அந்த வேடத்தில் நடிக்க 90களில் முன்னணியில் இருந்த இரண்டு நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமாவுக்குள் வந்து 37 ஆண்டுகள் - நாசருக்கு கார்த்தி ட்விட்டரில் வாழ்த்து!