பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மும்பை செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருவதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
'என்ஜாய் எஞ்ஜாமி' ரிப்பீட் மோடில் ரன்வீர் சிங் - Ranveer Singh byte in chennai
கரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
actor Ranveer Singh byte in chennai
சானிடைசர் கொண்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருங்கள்" என அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றபோது, தனது ப்ளூடூத் ஸ்பீக்கர் மூலம் தமிழில் தற்போது வைரலான 'என்ஜாய் எஞ்ஜாமி' பாடலைக் கேட்டுக்கொண்டே சென்றார்.