சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இன்று (நவ. 30) காலை 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார். அதில், மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், கள நிலவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மேலும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்தும், மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்களது கருத்தைத் தெரிவிக்க ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். அத்துடன் தனது உடல்நிலை குறித்தும் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின், ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தரா. அப்போது, "என்னுடைய முடிவு எதுவாகயிருந்தாலும், அதற்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆதரவு தருவதாகத் தெரிவித்தனர். விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.
ஜனவரியில் கட்சி தொடங்குகிறாரா நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் "விரைவில் முடிவை அறிவிப்பேன்" என மறுபடியும் காலம் தாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். இது குறித்து அவரது ரசிகர்கள், தலைவருக்காக காத்திருப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ரஜினிகாந்திற்கு நெருக்கமானவர்கள் வரும் ஜனவரியில், அவர் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி ஆலோசனை