சென்னை:தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச புத்தகப் பைகளில் அச்சிடப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த புகைப்படங்களை நீக்கவேண்டும் அல்லது அதன்மீது ஸ்டிக்கர் ஒட்டவேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
புகைப்படங்களை நீக்க ஆகும் 13 கோடி ரூபாயை அரசுப் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளுக்காக செலவிடுவேன் எனக்கூறி எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் அச்சிட்ட புத்தகப்பையையே விநியோகிக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். இது பலரின் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில், ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்ற தெலங்கு திரைப்பட நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.