சென்னை: ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்பேசியதற்கு நடிகர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. இருக்கின்றன என்பதை வரலாற்று ஏடுகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன.
இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின்போது அக்கால திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களிடையே பரவ செய்ததற்கான சாட்சிகள் கறுப்பு, வெள்ளை படங்களாக இன்றும் காண கிடைக்கின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் சமுதாய சீர்திருத்தம் கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன.
இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது.