நடிகர் நட்டி நடிக்கும் 'சைக்கோ திரில்லர்' படத்தை புதுமுக இயக்குநர் ஹாரூன் இயக்குகிறார். 'ட்ரீம் ஹவுஸ்' சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை.16) சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா, ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.