தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2021, 1:59 PM IST

Updated : Apr 17, 2021, 3:26 PM IST

ETV Bharat / city

அருமை நண்பரை இழந்துவிட்டேன் - நாசர் இரங்கல்

மறைந்தும் உயிர்ப்புடன் இருக்கும் நடிகர் விவேக்கிற்கு திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சிகளும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் தற்போது, நடிகர் நாசர் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

அருமை நண்பரை இழந்துவிட்டேன் - நாசர் இரங்கல்
அருமை நண்பரை இழந்துவிட்டேன் - நாசர் இரங்கல்

நடிகர் நாசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அன்பு நண்பர், சக ஊழியர் கலைமாமணி பத்மஶ்ரீ விவேக் அவர்களது பிரிவு என்னை அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைய செய்துள்ளது.

'மனதில் உறுதி வேண்டும்'

1987ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம் மூலம் விவேக் நடிகராக அறிமுகமானார்.

34 ஆண்டுகளாக மக்களின் மனம் கவர்ந்த நடிகராக தனது நகைச்சுவை மூலம் சமூக சிந்தனைகளையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் எடுத்துரைத்து வலம்வந்தவர் இன்று காலமானார் என்பது வேதனைக்குரியது.

பத்ம ஶ்ரீ விவேக்

ஐந்து முறை தேசிய விருதும், தமிழ்நாடு அரசின் சிறந்த நகைச்சுவை விருதும் பெற்றவர், பத்ம ஶ்" உள்பட பல பட்டங்கள் பெற்ற ஒப்பற்ற கலைஞன் எனப் போற்றப்பட்டவர் விவேக்.

பார் போற்றும் நமது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுடன் மிக நெருங்கிய தொடர்பும், நட்பும் வைத்திருந்த ஒரே நடிகர் விவேக்.

திரை வட்டாரத்தில் அனைவருடனும் நட்போடு இருந்த அவர், திரை உலகினர் மனத்தில் மட்டுமல்ல ரசிகர்களின் மனத்திலும் எல்லா அரசியல், சமூகத் தலைவர்களின் இதயத்திலும் இடம்பிடித்து பவனிவந்தவர்.

சூழலியல் ஆர்வலர்

‘ஒரு கோடி மரம்’ கன்றுகள் நடும் திட்டம் மூலம் சூழலியல் ஆர்வலராக அறியப்பட்டார். பலரும் அவரை முன்மாதிரியாக நினைத்து பின்பற்றி நல்ல செயல் செய்துவந்தனர்.

விவேக்கின் மறைவு நடிகர் சமூகத்துக்கும், திரை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அருமை நண்பரை இழந்துவிட்டேன். விவேக்கின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது துக்கத்தில் பங்கு கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:’சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த என் அன்புத் தம்பி விவேக்’ - சத்யராஜ் இரங்கல் வீடியோ

Last Updated : Apr 17, 2021, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details