தமிழ் சினிமாவில் சில்வர் ஜூப்ளி நாயகனாக வலம் வந்தவர், நடிகர் மோகன். இவரது படங்களில் பாடல்கள் எப்போதும் அருமையாக இருக்கும். இதனாலேயே இவரை மைக் மோகன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பர். கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது ஹரா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன் தனது சினிமா பயணத்தின் 45ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில், அன்னதானம் வழங்கினார்.