நடிகர் மாதவன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’, இப்படம் சமீபத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப்பெற்று வருகிறது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான மாதவன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். உடன் நம்பி நாராயணனும் இருந்துள்ளார். இந்த வீடியோவை மாதவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.