தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிக் பாஸ் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியமைக்க ஆரி அர்ஜூனன் கோரிக்கை - சென்னை அண்மைச் செய்திகள்

பிக் பாஸ் பார்ப்பவர்களின் வாழ்வியல் சூழல் பாதிக்கப்படுவதால் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என நடிகர் ஆரி அர்ஜுனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆரி அர்ஜூனன்
ஆரி அர்ஜூனன்

By

Published : Oct 30, 2021, 7:48 PM IST

சென்னை: பூந்தமல்லியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் சார்பில், தமிழ்நாடு அளவிலான மாணவர்கள் பங்கேற்ற ஸ்பெல் பீ (spell bee) எனும் சொல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

மழலையர் முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்ற இந்த போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது.

பரிசு வழங்கிய ஆரி

இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது ஆங்கில புலமை, நினைவாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தியது காண்போரை ஆச்சரியப்படுத்தியது.

பின்னர் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும், பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாடு அரசின் 'இல்லம் தேடி கல்வி திட்டம்’ வரவேற்புக்குரியது. இதன் மூலம் கிராமப்புற ஏழை, மாற்று திறனாளி மாணவர்கள் பெரிதும் பயனடைவர்.

பிக் பாஸ் நேரம் மாற்றியமைப்பு?

மேலும் கரோனா ஊரடங்கிற்கு பின்னர் நூறு விழுக்காடு திரையரங்குகள் திறக்கப்படுவது சந்தோஷம் அளிக்கிறது. ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு தினமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி நேரம் கடந்து ஒளிபரப்பப்படுவதால், நிகழ்ச்சியை பார்ப்போரின் வாழ்வியல் சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே பிக் பாஸ் நேரத்தை மாற்றியமைத்து ஒளிபரப்ப வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:ரஜினி,இயக்குநர் சிவா மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் -சௌந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம்

ABOUT THE AUTHOR

...view details