அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது இந்தியாவில் அவசர மருத்துவ தேவைக்கு அரசு ஆம்புலன்ஸ் உள்ளது. "108" என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும். உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவது விபத்து எனில், அந்த எண்ணிற்கு போன் செய்து அவர்கள் வரும் வரை காத்திருந்து காயம்பட்டவரை மருத்துவமனை அழைத்துச் சென்று இருக்கிறேன்.
இந்த பதிவு பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் எழுதுகிறேன். தவிர, யாரையும் எந்த துறையும் குறை கூறுவதற்காக அல்ல. மெடிக்கல் அவசர தேவை என்றவுடன் 108 நம்பருக்கு போன் செய்தவுடன் நம்மை தொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ் கால்சென்டரில் நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவது, எந்த மாவட்டம் எந்த தாலுகா, என்ன தெரு என்பதை தெளிவாக கேட்கிறார்கள் இன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது.
எனது மனதில் தோன்றிய எண்ணம்
அவசர தேவை என்றால் மட்டுமே நாம் ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா... இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம் இருக்கிறது. எனவே எந்த எண்ணில் இருந்து அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது மொபைல் எண்ணை வைத்து மற்றும் அல்லது லேண்ட்லைன் தொலைபேசியாக இருந்தால் ஜிபிஎஸ் வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை துல்லியமாக ஏன் அந்த பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு வண்டியில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் தெரிவிக்கக் கூடாது?