சென்னை:சென்னை தனியார் மாலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடுகள் பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தஞ்சாவூர் ஓவியம் நாச்சியார் கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனை கூடத்தை இன்று தொடங்கி வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் உள்ளது. அவற்றில் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தயாரிக்கும் 24 வகையான பொருட்களுக்கு புதிசார் குறியீடு பெறுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்து உள்ளார்.