சென்னை:அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதோடு மசாஜ் நிலைய உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹேமா ஜூவாலினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறை தொடர்ந்து புலன் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வழக்கு இன்று (ஏப். 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதந்திரமான முறையில் தொழில் நடத்தும் உரிமையில் காவல்துறை தலையிட முடியாது என்றும், விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிக்குதான் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.