பல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்தவர் மணி (45). தள்ளுவண்டி பழக்கடை நடத்திவரும் இவர், அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, பழம் வாங்குவது போல் சென்ற மூன்று பேர் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
பயந்துபோன மணி கையில் வைத்திருந்த 750 ரூபாயைக் கொடுத்துவிட்டு தள்ளுவண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவந்துள்ளார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், இந்நிகழ்வு குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டில் பதுங்கியிருந்த ஜெயபிரகாஷ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் ஒரு பாழடைந்த வீட்டுக்குள் பதுங்கியிருந்த நவீன் குமார் மற்றும் பாலாஜி ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்தனர்.