தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோடநாடு வழக்கு: காணொலி வாயிலாக விசாரணை நடத்த கோரிக்கை - வீடியோ கான்பிரன்ஸ்

கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக தங்களிடம் விசாரணை நடத்தக் கோரி இணையவழியில் மனு அளித்துள்ளனர்.

கோடநாடு வழக்கு விசாரணை
கோடநாடு வழக்கு விசாரணை

By

Published : Sep 18, 2021, 9:16 AM IST

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை காவல் துறையினர் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

விசாரணை உதகையிலுள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்துவருகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் மறு விசாரணை நடந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட 10ஆவது நபரான ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

காணொலி வாயிலாக விசாரணை

மேலும், வழக்கின் 40ஆவது சாட்சியான கனகராஜின் நண்பர் குழந்தைவேலு, சிவன், ஈரோட்டைச் சேர்ந்த திருமூர்த்தி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜம்சீர் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர், ஜித்தின் ஜாயை விசாரணைக்கு அழைத்தனர்.

கோடநாடு வழக்கு விசாரணை

இந்நிலையில், தங்களை காணொலி வாயிலாக விசாரணை நடத்த வேண்டும் என வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி, சதீசன், தீபு ஆகியோர் தங்களது வழக்கறிஞர்கள் கே. விஜயன், முனிரத்தனம், செந்தில் ஆகியோர் மூலம் மேற்கு மண்டல ஐஜியிடம் இணையவழியில் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோடநாடு - மேல் விசாரணைக்குத் தடை கோரி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details