தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுவன்: ஓட்டுநரிடம் காவலர்கள் விசாரணை! - பள்ளி மாணவன் விபத்து

தாம்பரம் அருகே அரசுப் பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளிச் சிறுவன், தவறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் சிறுவனின் வலது காலில் ஏறி இறங்கி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் துறையினர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுவன்
அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுவன்

By

Published : Apr 12, 2022, 1:58 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பதுவஞ்சேரி சின்னம்மன் தெருவைச் சேர்ந்த ராம்-பாரதி தம்பதியின் மகன் வசந்த்(14). இவர் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று (ஏப்.11) காலை பள்ளிக்குச் செல்வதற்காக அகரம் தென்னில் இருந்து மேற்கு தாம்பரம் வரை செல்லும் தடம் எண் 31 ஏ அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டில் தொங்கியபடி வசந்த் பயணித்துள்ளார். தாம்பரம்-வேளச்சேரி சாலையில் சேலையூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக வசந்த் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பேருந்தின் பின்சக்கரம், மாணவனின் வலது காலில் ஏறி இறங்கியது. இதனால் மயக்கமடைந்த சிறுவனை மீட்ட சேலையூர் காவல் துறையினர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் நாகலிங்கம்(45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'Video: சென்னையில் கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்குதல்'

ABOUT THE AUTHOR

...view details