சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் அஜய் (23), என்பவருடன் அவரது தந்தை குப்பன் (50) பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார்.
லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - accident in chennai
சென்னையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தவர் நிலைதடுமாறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து
அப்போது திடீரென அஜய் இருசக்கர வாகனத்தின் பிரேக்கை பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பின்னால் அமர்ந்திருந்த அவரது தந்தை குப்பன் கீழே விழுந்ததில் பின்னால் வந்த கழிவுநீர் லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.