தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி! - பாடப்புத்தகம்

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு உத்தரவின்படி பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியர் வழங்கினார்.

School books issued
School books issued

By

Published : Aug 3, 2020, 12:15 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்று (ஆக.3) முதல் பாடப்புத்தகங்களை தகுந்த இடைவெளியை கடைபிடித்து வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

அதனடிப்படையில் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை சரஸ்வதி பாடப்புத்தகங்களை வழங்கினார்.

அதேபோல் சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் சண்முகவேல் பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பையை வழங்கினார்.

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முன்கூட்டி வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு கிருமிநாசினி மூலம் தங்கள் கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடித்து புத்தகங்களைப் பெற்று சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: "மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை"- தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details