நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமே தேர்தலில் போட்டியிடுகிறார்.
'தேர்தல் பரப்புரைக்கு விஜயகாந்த் வருவார்' - ஏ.சி. சண்முகம் உறுதி! - ஏசி சண்முகம்
சென்னை: "வேலூரில் தனக்காக தேர்தல் பரப்புரை செய்ய விஜயகாந்த் வருவதாக உறுதியளித்துள்ளார்" என, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
dmdk
இந்நிலையில் தேமுதிகவின் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்தை, ஏ.சி.சண்முகம் இன்று நேரில் சந்தித்தார். தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், “வேலூரில் தனக்காக தேர்தல் பரப்புரை செய்ய வருவதாக விஜயகாந்த் உறுதி அளித்தார்” என்றார்.