தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொலை செய்துவிட்டு தலைமறைவு: ஒரு ஆண்டிற்கு பின் வடமாநில இளைஞர் கைது - கொலை செய்துவிட்டு தலைமறைவு

சென்னையில் கொலை செய்துவிட்டு தலைமறைவான வடமாநில இளைஞரை ஒரு ஆண்டிற்கு பின்னர் காவல் துறையினர் கைது செய்தனர்.

வடமாநில இளைஞர் கைது
வடமாநில இளைஞர் கைது

By

Published : May 2, 2022, 11:01 AM IST

சென்னை:கடந்த 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் பாரிமுனை முத்துசாமி பாலம் அருகே பாழடைந்த கழிவறையில் 30-35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றிய பூக்கடை காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் யாரென CCTNS (Crime and Criminal Tracking Network & Systems) வலைதளம் மூலம் தீவிரமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வியாசர்பாடி காவல் நிலையத்தில் சதிஷ்குமார் (30) என்பவர் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிந்து அவரின் பெற்றோரிடம் டி.என்.ஏ சோதனை செய்தனர். அதில் இறந்த நபர் சதீஷ்குமார் என்பதை உறுதி செய்தனர்.

சிசிடிவி காட்சியில் சம்பவம் நடந்த அன்று கழிவறையிலிருந்து கால் சற்று நடக்கமுடியாத நபர் ஒருவர் வெளிவருவதை கண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் ராஜீவ்காந்தி மருத்துவமனை பகுதிகளிலுள்ள பிளாட்பார்ம்களில் தங்கி வந்துள்ளார். அவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர் (26). கொலை சம்பவத்திற்கு பின்னர் அவர் தலைமறைவாகி உள்ளார் என்பது தெரிய வந்தது. சமீபத்தில் சென்னை வந்த பகதூரை பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் பிரபுவின் தனிப்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பகதூரிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று பகதூர், முத்துசாமி பாலம் அருகே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் தன்னுடன் வந்தால் ரூபாய் 500 தருவதாக கூறி, அவரை பாழடைந்த கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சதீஷ்குமார் பகதூரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இதனால், வலியில் துடித்த பகதூர், இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை இரண்டு முறை குத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

மேலும், வலி தாங்க முடியாமல் சதீஷ்குமாரை தான் கத்தியால் குத்தியதாகவும் ஆனால் அவர் இறந்து போனது தற்போது தான் தனக்கு தெரியும் எனவும் பகதூர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பூக்கடை காவல் துறையினர் பகதூரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தர்மபுரி: காரில் ஹெராயின் கடத்திய இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details