சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு விவரங்கள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்.29) புள்ளி விவபர தகவலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 674 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் ஆயிரத்து 39 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 99 லட்சத்து 88 ஆயிரத்து 928 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 27 லட்சத்து 593 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 850 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் ஆயிரத்து 229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 52 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துமனையில் ஐந்து நோயாளிகளும் அரசு மருத்துமனையில் ஆறு நோயாளிகள் என 11 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 83 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 126 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 118 நபர்களுக்கும் என அதிகளவில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5 லட்சத்து 54ஆயிரத்து 439
கோயம்புத்தூர் - 2லட்சத்து 46ஆயிரத்து 544
செங்கல்பட்டு - ஒரு லட்சத்து 71ஆயிரத்து 608
திருவள்ளூர் - ஒரு லட்சத்து 19ஆயிரத்து 309
ஈரோடு - ஒரு லட்சத்து 4ஆயிரத்து 164
சேலம் - 99ஆயிரத்து 771
திருப்பூர் - 95ஆயிரத்து 265
திருச்சிராப்பள்ளி - 77ஆயிரத்து 457
மதுரை - 75ஆயிரத்து 188
காஞ்சிபுரம் - 74ஆயிரத்து 910
தஞ்சாவூர் - 75ஆயிரத்து 273
கடலூர் - 64ஆயிரத்து 51
கன்னியாகுமரி - 62ஆயிரத்து 328
தூத்துக்குடி - 56ஆயிரத்து 281
திருவண்ணாமலை - 54ஆயிரத்து 935
நாமக்கல் - 52ஆயிரத்து 154
வேலூர் - 49ஆயிரத்து 830
திருநெல்வேலி - 49ஆயிரத்து 351
விருதுநகர் - 46ஆயிரத்து 283
விழுப்புரம் - 45ஆயிரத்து 838
தேனி - 43ஆயிரத்து 565
ராணிப்பேட்டை - 43ஆயிரத்து 412
கிருஷ்ணகிரி - 43ஆயிரத்து 536
திருவாரூர் - 41ஆயிரத்து 415
திண்டுக்கல் - 33ஆயிரத்து 083
நீலகிரி - 33ஆயிரத்து 539
கள்ளக்குறிச்சி - 31ஆயிரத்து 336
புதுக்கோட்டை - 30ஆயிரத்து 163
திருப்பத்தூர் - 29ஆயிரத்து 283
தென்காசி - 27ஆயிரத்து 350
தருமபுரி - 28ஆயிரத்து 398
கரூர் - 24ஆயிரத்து 048
மயிலாடுதுறை - 23ஆயிரத்து 273
ராமநாதபுரம் - 20ஆயிரத்து 559
நாகப்பட்டினம் - 21ஆயிரத்து 046
சிவகங்கை - 20ஆயிரத்து 171
அரியலூர் - 16ஆயிரத்து 847
பெரம்பலூர் - 12ஆயிரத்து 059
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - ஆயிரத்து 28
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - ஆயிரத்து85
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க:கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை