Covid Vaccination Camp | சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி பணிகள் நடைபெற்றது.
இம்மையங்களில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி அளிக்கத் திட்டமிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற 16 மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் மூன்று கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.
86.95 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ்
இன்று (ஜனவரி 2) நடைபெற்ற 17ஆவது மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 15 லட்சத்து 16 ஆயிரத்து 804 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் தவணையாக 4 லட்சத்து 20 ஆயிரத்து 98 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 10 லட்சத்து 96 ஆயிரத்து 706 பயனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மெகா தடுப்பூசி முகாமைப் பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் இதுவரை 86.95 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.71 விழுக்காட்டினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தீ விபத்து