தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

#MilkProductsPriceHiked: ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு! - price hike announced

சென்னை: பால் உற்பத்தி விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய விலைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

milk price hiked

By

Published : Sep 15, 2019, 1:32 PM IST

Updated : Sep 15, 2019, 4:18 PM IST

பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 17ஆம் தேதி உத்தரவிட்டது. அதேசமயம் பால் விற்பனை விலையையும் தனியார், பொது நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி இன்று ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய விலைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வை அடுத்து இப்போது தனியார் நிறுவனங்களும் தங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. தமிழ்நாட்டில் பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஹட்சன் நிறுவனம் இன்று முதல் தங்கள் பால் விலையை 4 ரூபாய் உயர்த்துவதாகப் பால் முகவர்களுக்குச் சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அந்நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு 60 ரூபாய் என்ற அதிகபட்ச விலையை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Last Updated : Sep 15, 2019, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details