சென்னை:தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) பிரிவில் தலைமை விஜிலென்ஸ் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே விற்பனை பொது மேலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பொது மேலாளர்களை பணியிடை நீக்கம் செய்யாமல் விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வராது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, முன்னாள் அமைச்சரின் பினாமிகளாக செயல்பட்டு வந்த அலுவலர்களை கூண்டோடு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.