சென்னை: ஆதம்பாக்கத்தில் நேற்று (அக்டோபர் 14) பிரபல ரவுடியும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நாகூர் மீரான் என்பவரை அவரது தோழி இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கொலையாளிகள் அனைவரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
பழிக்குப்பழி
இந்நிலையில் கொலையுண்ட நாகூர் மீரானின் கூட்டாளிகள் சிலர் கொலைக்கு பழி வாங்கும் விதமாக பல்லாவரத்தில் உள்ள கொலையாளி ராபினின் உறவினர்களான அந்தோனி, சகாயம் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.